தொடர் மழை – மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் திறப்பு!

நுவரெலியா மாவட்டத்தில் தொடர் மழை பெய்துவருவதால் மேல்கொத்மலை நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் அதிகரித்துள்ளது. இதனால் மேற்படி நீர்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகள் இன்று அதிகாலை  திறந்துவிடப்பட்டன.
நுவரெலியா மாவட்டத்தில் தொடந்து  மழையுடன் கூடிய சீரற்ற காலநிலை நிலவுவதால் நீரேந்தும்  பகுதிகளில் நீர்ட்டம் வெகுவாக அதிகரித்துள்ளது. டெவன் மற்றும் சென்கிளேயர்  நீர்வீழ்ச்சிகள் பெருக்கெடுத்துள்ளன.
எனவே  கரையோர பகுதியில் உள்ளவர்கள் அவதானத்துடன் இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்,
அதேவேளை, சீரற்ற காலநிலையால் நுவரெலியா – ஹட்டன்,  ஹட்டன் – கொழும்பு உள்ளிட்ட பிரதான வீதிகளில் பணி மூட்டம் அதிகரித்து கணப்படுகின்றது . சாரதிகள் அவதானத்துடன் வாகனங்களை செலுத்துமாறு பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
நோட்டன் பிரிட்ஜ் நிருபர் எம்.கிருஸ்ணா

Related Articles

Latest Articles