‘தொற்றாளர்களின் எண்ணிக்கை குறையவில்லை – மேலும் இரு வாரங்கள் நாட்டை முடக்கவும்’

நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டுள்ள முடக்கல் நிலையை மேலும் இரண்டு வாரங்களுக்கு நீடிக்க வேண்டும் இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்தார்.

கொவிட்-19 தொற்றாளர்களின் எண்ணிக்கையில் போதியளவு வீழ்ச்சி ஏற்படாத காரணத்தினால் முடக்கல் நிலையை மேலும் இரண்டு வாரங்களுக்கு விதிப்பது அவசியம்.

சமூகத்தில் பல தொற்றாளர்கள் இருக்கக்கூடும்.டெல்டா கொரோனா வைரஸ் மாறுபாடு கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து சமூகத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

எனவே வைரஸ் தொற்றுகளின் அளவை கட்டுப்படுத்த கடுமையான பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

Related Articles

Latest Articles