‘தொழிற்சங்க துறவி’ வி.கே. வெள்ளையனின் 106 ஆவது ஜனன தினம் இன்றாகும்
📷பெயர்- வி.கே. வெள்ளையன்.
📷தந்தை – காளிமுத்து.
📷தாய் – பேச்சியம்மாள்.
📷 பிறந்த திகதி – 1918 நவம்பர் 28.
📷சொந்த ஊர் – பொகவந்தலாவை, முத்துலட்சுமி தோட்டம்.
📷ஆரம்பகல்வி – பொகவந்தலதாவை கெம்பியன் தோட்டப் பாடசாலை, பொகவந்தலாவை சென். மேரிஸ் மகா வித்தியாலயம்.
📷உயர்கல்வி – கண்டி திரித்துவக் கல்லூரி.
(கண்டி திரித்துவக் கல்லூரியில் ரக்பி அணி தலைவராகவும் செயற்பட்டுள்ளார்.)
📷ஆரம்ப தொழில் – கூட்டுறவு சங்க முகாமையாளர்.
(இவரை தோட்ட துரையாக்க வேண்டும் என்பதே கங்காணி குடும்பத்தின் கனவாக இருந்தது. எனினும், பொலிஸ் அதிகாரியாகவே வெள்ளையன் விரும்பினார். அதற்கான விண்ணப்பமும் தாக்கல் செய்துள்ளார். எனினும், குடியுரிமை பறிப்பால் அந்த கனவு நிறைவேறவில்லை எனக் கூறப்படுகின்றது.)