தொழிற்சங்க போராட்டம் வெற்றி! ஒத்துழைத்த அனைவருக்கும் ஜீவன் நன்றி தெரிவிப்பு!!

மஸ்கெலியா பெருந்தோட்ட யாக்கத்திற்கு எதிராக மேற்கொண்டுவந்த தொழிற்சங்க போராட்டம் (23) இன்றுடன் நிறைவு பெறும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஜீவன் தொண்டமான் விடுத்துள்ள அறிக்கையில் , மஸ்கெலியா பெருந்தோட்ட யாக்கமானது , இ.தொ.கா தொழிலாளர்கள் சார்பில் முன் வைத்த அனைத்து கோரிக்கைகளையும் ஏற்றுள்ளது எனவும், இதனை ஒரு முழுமையான வெற்றியாக பார்க்கின்றோம், இ.தொ.காவின் பேரம் பேசும் சக்திக்கு கிடைத்துள்ள மாபெரும் வெற்றி இது – என குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேவேளை, மக்களுக்கு கிடைக்கவேன்டிய சம்பள நிலுவை தொகை அந்தந்த தோட்ட நிறுவாகத்தினூடாக தொழிலாளர்களுக்கு கிடைக்கும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த வெற்றிக்கு உறுதுணையாக இருந்த அனைத்து தொழிலாளர்களும், தொழிற்சங்க செயற்பாட்டாளர்களுக்கும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன் எனவும் ஜீவனால் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles