இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் (SLBFE) இலங்கை தொழில் பயிற்சியாளர்களுக்கான பாடநெறி அல்லது பரீட்சை கட்டணத்தை திருப்பிச் செலுத்துவதாக அறிவித்துள்ளது.
தொழில் பயிற்சியாளர்களை வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்கு ஊக்குவிக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ள SLBFE தெரிவித்துள்ளது.
இதன் மூலம், SLBFE பாடநெறி கட்டணம் அல்லது தேர்வுக் கட்டணத்தை நிபந்தனைகளுக்கு உட்பட்டு திருப்பிச் செலுத்துவதாக அறிவித்துள்ளது.