தொழிலாளர்களின் பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வுகளை பெற்றுக்கொடுத்த ஜீவன்!

இதொகாவின் பொதுச்செயலாளரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமானுக்கும், பிரவுன்ஸ் பெருந்தோட்ட யாக்க சிரேஷ்ட முகாமையாளர் ரிச்சர்ஸ்டனுக்கும் இடையிலான கலந்துரையாடலொன்று நேற்று (02) நுவரெலியா இ.தொ.கா காரியாலயத்தில் இடம்பெற்றிருந்தது.

பிரவுன்ஸ் பெருந்தோட்டயாக்கத்தின் கீழ் இயங்கும் சமர்ஹில், எஸ்கடேல், கொங்கோடியா, அல்மா ஆகிய தோட்டங்களில் நிலவிவந்த பல்வேறு தொழில் பிணக்குகள் தொடர்பான இதன்போது கலந்துரையாடப்பட்டன.

மேலும் இக்கலந்துரையாடலில் தொழிலாளாளர்களுக்கு சாதகமான முறையில் அனைத்து விடயங்களையும் தீர்த்து வைப்பதாகவும், எதிர்காலத்திலும் இவ்வாறான பிரச்சினைகள் இடம்பெறாத வகையில் செயற்படுவதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமானிடம், பிரவுன்ஸ் பெருந்தோட்டயாக்க சிரேஷ்ட முகாமையாளர் உறுதியளித்துள்ளார்.

நுவரெலியா – சமர்ஹில், எஸ்கடேல், அல்மா ஆகிய தோட்டங்களில் ஏற்பட்ட மண்சரிவு அனர்த்தங்களால் மாற்று இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கான காணிகளை விடுவித்து தருவதாகவும் தோட்ட முகாமையாளர் உறுதியளித்துள்ளார்.

ஜீவன் தொண்டமான் தலைமையில் நுவரெலியா இ.தொ.கா காரியாலயத்தில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில் நுவரெலியா பிரதேச சபை முன்னாள் தவிசாளர் வேலு யோகராஜ், நுவரெலியா மானில காரியாலய இயக்குனர் ராஜாராம், ராகலை பிராந்திய காரியாலய இயக்குனர் காசிராஜ், உடப்புஸ்ஸலாவ காரியாலய மாவட்ட இயக்குனர் குணசீலன் உட்பட்ட தோட்ட மக்கள் என பலர் கலந்துகொண்டிருந்தனர்.

Related Articles

Latest Articles