தொழிலாளர் தேசிய சங்கத்தின் உறுப்பினர் நகுலேஷ்வரன் இன்று (18.12.2020) கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
நோர்வூட் பிரதேச சபை உறுப்பினர் ரவி குழந்தைவேலுவினால் 2019 ஜுலை மாதம் ஹட்டன் பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்தில் முன்வைக்கப்பட்ட முறைப்பாடு தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுவந்த நிலையிலேயே அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
அதிகார துஷ்பிரயோகம், மோசடியான முறையில் ஆவணம் வழங்கியமை உள்ளிட்ட விடயங்களை மையப்படுத்தியே தான் முறைப்பாட்டை முன்வைத்ததாக நோர்வூட் பிரதேச சபையின் தலைவர் தெரிவித்தார்.
அதேவேளை, நகுலேஷ்வரனை பிணையில் எடுப்பதற்கான நடவடிக்கையை அவரின் ஆதரவாளர்கள், சட்டத்தணி ஊடாக முன்னெடுத்துள்ளனர்.










