தொழிலாளர் தேசிய சங்கத்தின் 16 ஆவது பேராளர் மாநாடு விரைவில் நடைபெற உள்ளது என தொழிலாளர் தேசிய சங்கத்தின் பொதுச் செயலாளர் எஸ்.பிலிப் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரத்தின் ஆலோசனைக்கேற்ப தொழிலாளர் தேசிய சங்கத்தின் 16 வது பேராளர் மாநாடு நடத்துவதற்கான ஏற்பாடுகள் தற்போது இடம்பெற்று வருகின்றன.
தொழிலாளர் தேசிய சங்கத்தின் அங்கத்தவர்களுக்கிடையே தோட்ட வாரியாக புதிய தோட்டக் கமிட்டிகள் கடந்த மாதங்களில் அமைக்கப்பட்டுள்ளன.
தற்போது மாவட்டக் கமிட்டிகள் அமைப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதற்கேற்ப நாளை 15 ஆம் திகதி டிக்கோயா, நோர்வூட், பத்தனை, பூண்டுலோயா ஆகிய மாவட்டங்களுக்கான (தொழிற்சங்க ரீதியான மாவட்டம்) மாவட்டக்கமிட்டி, இளைஞர் கமிட்டி, மகளிர் கமிட்டி தேர்தல்கள் இடம்பெறவுள்ளன. இதற்காக எமது சங்கத்தின் முழுநேர உத்தியோகத்தர்கள் ஒத்துழைப்பு வழங்கி வருகின்றனர்.” – என்றார்.
