தொழில்வாய்ப்பு பண மோசடி – வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியக அதிகாரி கைது

ருமேனியாவில் தொழில் பெற்றுத்தருவதாகக் கூறி 05 இலட்சம் ரூபா பண மோசடியில் ஈடுபட்ட வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியக அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விசேட விசாரணைப் பிரிவினரால் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நுகேகொடை நீதவான் நீதிமன்றத்தில் அவரை பொலிஸார் ஆஜர்படுத்தியதை அடுத்து, 5 இலட்சம் ரூபா பெறுமதியான 2 சரீரப் பிணையிலும் 10,000 ரூபா பெறுமதியான பிணையிலும் விடுவிக்க உத்தரவிடப்பட்டது.

இதனிடையே, மோசடியான முறையில் நடத்தப்படும் முகவர் நிலையங்களை சோதனையிட்டு, சந்தேகநபர்களை கைது செய்வதற்கான விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாக வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்தது.

Related Articles

Latest Articles