பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச நாட் சம்பளமாக ஆயிரம் ரூபா வழங்கப்படவேண்டும் என்பது அரசாங்கத்தின் கொள்கை ரீதியிலான முடிவாகும். அந்த முடிவை நிறைவேற்றும் பொறுப்பிலிருந்து அரசாங்கம் விலகாது. சவால்களை எதிர்கொள்ளும்.
சம்பள உயர்வு விடயத்தில் தோட்டக்கம்பனிகளால் தன்னிச்சையாக செயற்படமுடியாது. கடந்த காலங்களில் 50 ரூபாவைக்கூட பெற்றுக்கொள்ளமுடியாத நிலை காணப்பட்டது.
இவ்வாறு அமைச்சரவை இணைப்பேச்சாளரும், அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு இன்று நடைபெற்றது. இதன்போது பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் கெஹலிய மேற்கண்டவாறு கூறினார்.