தோட்டக் கம்பனிகளுடன் கள்ள ஒப்பந்தம் செய்யமாட்டேன்!

தோட்டத் தொழிலாளர்களை சிறுதோட்ட உரிமையாளர்களாக்குவேன் – என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
இரத்தினபுரியில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

“ தேயிலைத் தொழிலை வலுப்படுத்தி, தற்போது லயன் அறைக்குள் சுருங்கிப்போயுள்ள பெருந்தோட்ட மக்களுக்கு எப்பொழுதும் சம்பளம் அதிகரிக்கப்படும் எனக் பொய்களை கூறாமல், கன்பனிக் காரர்களுடன் திருட்டு ஒப்பந்தங்களைச் செய்து தொழிலாளிகளை நசுக்குவதை விட்டுவிட்டு, தோட்டத் தொழிலாளர் சமூகத்தை சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்களாக மாற்றுவேன்.

தரிசு நிலங்கள், விவசாய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாமல் இருக்கும் காணிகளை தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் வேலையில்லாத இளைஞர்களுக்கு வழங்கி, சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்களாக மாற்ற நடவடிக்கை எடுப்பேன்.” – எனவும் சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Latest Articles