தோட்டத்தொழிலாளர்களை ஏற்றிச்சென்ற வாகனம் விபத்து – 10 பேர் காயம்!

தொழிற்சாலையில் பணிபுரியும் பெண் தொழிலாளர்களை ஏற்றிச்சென்ற உழவு இயந்திரம் விபத்துக்குள்ளானதில், 10 பேர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் பசறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் , மேலதிக சிகிச்சைக்காக அவர்களில் நால்வர் பதுளை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

பசறை, கோணக்கலை தொழிற்சாலையில் கடமையாறிய பெண் தொழிலாளர்களை, வேலை முடிந்ததும் நேற்று இரவு 7 மணி அளவில் ஏற்றிக்கொண்டு காவத்தைப் பகுதிக்கு சென்று கொண்டிருந்த உழவு இயந்திரம் ஒன்று, காவத்தைத் தோட்டத்திற்கு செல்லும் வீதியில் வீதியை விட்டு விலகியே விபத்துக்குள்ளானது.

பசறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ராமு தனராஜ்

Related Articles

Latest Articles