ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான இந்த அரசாங்கத்துக்கு, பெருந்தோட்டத் தொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வை வழங்கவேண்டும் என்ற அக்கறை இல்லை என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட வேட்பாளர் சட்டத்தரணி ஹிரண்யா ஹேரத் தெரிவித்தார்.
வலப்பனை – ஹெய்போரஸ்ட் தோட்டத்தில் நடைபெற்ற பிரச்சாரக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,
” பெருந்தோட்டக்கைத்தொழில்துறை அமைச்சுப்பதவியை வகித்த நவீன் திஸாநாயக்க, பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்காக எதனையும் செய்யவில்லை. குறைந்தபட்சம் 50 ரூபா கொடுப்பனவை வழங்குவதற்குகூட முன்வரவில்லை.
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா வழங்கப்படும் என ஜனாதிபதி உறுதியளித்திருந்தாலும் இன்னும் அந்த கொடுப்பனவு கிடைக்கவில்லை. ஏன் வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என ஜனாதிபதியிடம் கேட்க விரும்புகின்றேன்.” – என்றார்.