தோட்டத் தொழிலாளர்களுக்கு நாட் சம்பளமாக 20 ரூபாய் மட்டுமே அதிகரிப்பு!

2019 ஆம் ஆண்டு குறைந்தப்பட்ச நாள்சம்பளமாக பெருந்தோட்டத் தொழிலாளர்கள் ஆயிரம் ரூபாய் சம்பளக் கோரிக்கையை முன்வைத்திருந்த போதிலும், அந்த ஆண்டு வெறும் 20 ரூபாய் சம்பளமே அதிகரிக்கப்பட்டிருப்பதாக மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.

நாடாளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ள, 2019ஆம் ஆண்டுக்கான மத்திய வங்கியின் ஆண்டறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், 2019ஆம் ஆண்டு பெருந்தோட்டத்துறை தொழிலாளர்கள் குறைந்தப்பட்ச நாளாந்தக் கூலியாக 1,000 ரூபாய் சம்பள அதிகரிப்பைக் கோரி ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டதுடன், அதனைத் தொடர்ந்து அடிப்படைச் நாற்சம்பளமானது 500 ரூபாயிலிருந்து 700 ரூபாய் வரையில் அதிகரிக்கப்பட்டது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு செலுத்தப்பட்டு வந்த உற்பத்தித்திறன் கொடுப்பனவு, வருகைக் கொடுப்பனவு நிறுத்தப்பட்டமையால், பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு மொத்தச் சம்பளமாக 20 ரூபாய் மாத்திரமே அதிகரிக்கப்பட்டதாக, அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பா.நிரோஷ்

நன்றி – தமிழ்மிரர்

Related Articles

Latest Articles