தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட் சம்பளமாக ரூ. 2000! கோரிக்கை முன்வைப்பு!

” மலையக மக்களுக்கான சமூக நீதி தொடர்ச்சியாக மீறப்படுகின்றது. கல்வி, காணி, பொருளாதாரம் என மிக முக்கியமான உரிமைகள்கூட மறுக்கப்படுகின்றன. இந்நிலைமையை தொடர்ந்து அனுமதிக்க முடியாது. மலையக மக்களுக்கான உரிமைகளை உறுதிப்படுத்தப்பட வேண்டும் .” என்று தொழிற்சங்கங்கள் மற்றும் சிவில் அமைப்புகளின் கூட்டணி வலியுறுத்தியுள்ளது.

அத்துடன், பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட் சம்பளமாக 2000 ரூபா வழங்கப்பட வேண்டும் என்ற யோசனையும் முன்வைக்கப்பட்டது.

மலையக சிவில் மற்றும் தொழிற்சங்க, வெகுசன அமைப்புகள் இணைந்து அட்டனில் இன்று (07.10.2022) கூட்டு ஊடகவியலாளர் சந்திப்பை ஏற்பாடு செய்திருந்தனர்.

இதில் மலையக மக்களின் காணி உரிமைக்கான இயக்கத்தின் செயற்பாட்டாளர் எஸ்.டி.கணேசலிங்கம், சமூக நீதிக்கான மலையக வெகுஜன அமைப்பின் செயற்பாட்டாளர் இராஜேந்திரன், தோட்ட தொழிலாளர் மத்திய நிலையத்தின் அமைப்பாளர் டீ.மாக்ஸ் பிரபாகரர், ப்ரொடெக்ட் சங்கத்தின் உப தலைவி கருப்பையா மைதிலி, தோட்ட தொழிலாளர் மத்திய நிலையத்தின் செயலாளர் வசந்தகுமார அபேகோன் ஆகிய பிரதிநிதிகள் கலந்துகொண்டு, கருத்துகளை முன்வைத்தனர். இதன்போது தெரிவிக்கப்பட்ட முக்கிய கருத்துகள் வருமாறு,

” மலையகத் தமிழர்களும் ஓர் தேசிய இத்துக்குரியவர்கள். எனினும், அவர்களுக்கான சமூக நீதி மீறப்படுகின்றது. கல்வி உரிமை, காணி உரிமை, பொருளாதாரம் உள்ளிட்ட உரிமைகள் மறுக்கப்படுகின்றன. எதையும் போராடியே பெற வேண்டும் என்ற நிலைமை உருவாகியுள்ளது. இந்நிலைமை நீடிப்பதை அனுமதிக்க முடியாது.

நாட்டுக்கு அந்நிய செலாவணியை பெற்றுக்கொடுக்கின்ற மலையக பெருந்தோட்டங்களை பாதுகாக்க வேண்டும். அப்படியானால் தொழிலாளர்களின் தொழில்சார் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும். தற்போதைய பொருளாதார சூழ்நிலையில் வாழ்க்கைச்சுமை உச்சம் தொட்டுள்ளது. எனவே, அடிப்படை நாட் சம்பளமாக 2000 ரூபா வழங்கப்பட வேண்டும். அதற்கான அழுத்தங்கள் தொடரும்.

பெருந்தோட்டப்பகுதிகளில் உள்ள தரிசு நிலங்களை இளைஞர்களுக்கும், தொழில் இல்லாதவர்களுக்கும் பிரித்துக்கொடுக்க வேண்டும். உற்பத்திக்காக நிலங்களை வழங்கலாம் என ஜனாதிபதிகூட முன்மொழிவு செய்திருந்தார். ஆனால் இதற்கு மாறாக தோட்டக் கம்பனிகள் செயற்படுகின்றன. எமது மக்களுக்கான காணி உரிமை அவசியம். ” – என்று பிரதிநிதிகள் குறிப்பிட்டனர்.

க.கிஷாந்தன்

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles