” மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு அவசியம் என்ற நிலைப்பாட்டிலேயே தொழில் அமைச்சு இருக்கின்றது.” – என்று அமைச்சர் மனுச நாணயக்கார தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
” பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் கடந்த முறை சம்பள நிர்ணயசபை ஊடாகவே நிர்ணயிக்கப்பட்டது.
ஆயிரம் ரூபா நிர்ணயிக்கப்பட்டது. தற்போதைய சூழ்நிலையில் அவர்களுக்கு சம்பள உயர்வு அவசியம். மீண்டும் கூட்டு ஒப்பந்த முறைமைக்கு வருமாறு அனைத்து தரப்புகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளோம்.
இந்த கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்படாதபட்சத்தில் சம்பள நிர்ணயசபையைக் கூட்டி, தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கான ஆலோசனையை ஜனாதிபதி எனக்கு வழங்கியுள்ளார்.” – எனவும் தொழில் அமைச்சர் குறிப்பிட்டார்.










