‘தோட்டப்பகுதிகளில் தடுப்பூசி திட்டத்தை துரிதப்படுத்தவும்’ – சுகாதார அமைச்சரிடம் ராதா கோரிக்கை

மலையக பெருந்தோட்டப்பகுதிகளில் கொவிட் – 19 இற்கான தடுப்பூசி திட்டத்தை துரிதப்படுத்தி மக்களின் சுகாதாரப் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவிடம், மலையக மக்கள் முன்ணியின் தலைவர் இராதாகிருஷ்ணன் எம்.பி. கோரிக்கை விடுத்துள்ளார்.

அமைச்சர் கெஹலியவுக்கும், ராதாகிருஷ்ணனுக்கும் இடையில் இன்று தொலைபேசி கலந்துரையாடல் இடம்பெற்றது. இதன்போதே மேற்படி கோரிக்கையை விடுத்துள்ளார்.

” மலையக பெருந்தோட்டப்பகுதிகளில் தடுப்பூசி ஏற்றும் பணி மந்தகதியிலேயே இடம்பெற்றுவருகின்றது. தடுப்பூசி ஏற்றப்படும் இடங்களுக்கும் போதுமானளவு தடுப்பூசிகள் வருவதில்லை. ” – எனவும் ராதாகிருஷ்ணன் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது தொடர்பில் மத்திய மாகாண சுகாதார பணிப்பாளருக்கு தெரியப்படுத்துவதாகவும், தேசிய அடையாள அட்டை இல்லாமல் தடுப்பூசி போட தவறியவர்களுக்கு , தோட்ட நிர்வாகத்தின் கடிதமோ அல்லது கிராமசேவகர் உறுதிபடுத்தல் கடிதத்தோடு தடுப்பூசியை ஏற்றுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட தரப்புகளுக்கு தெரியப்படுத்துவதாகவும் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உறுதிப்படுத்தியுள்ளார்.

நிருபர் – நீலமேகம் பிரசாந்த்.

Related Articles

Latest Articles