தோட்ட உதவி முகாமையாளரை கைது செய்ய வேண்டும் – வேலுகுமார்

” மாத்தளை, ரத்தவத்தை தோட்டத்தில் அடாவடியில் ஈடுபட்ட தோட்ட முகாமையாளர் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும். அதற்கான அழுத்தத்தை ஆளுங்கட்சியில் உள்ளவர்கள் பிரயோகிக்க வேண்டும்.” – என்று கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் தெரிவித்தார்.

மாத்தளை , எல்கடுவ பெருந்தோட்ட ரத்வத்தை தோட்ட விவகாரம் தொடர்பில் சபையில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

” அமைச்சர் ஜீவன் தொண்டமானின் உணர்வு, அவருடைய அக்கறை எமக்கு புரிகின்றது. அவர் சம்பவ இடத்துக்கு சென்றதை வரவேற்கின்றோம். அதற்கான கௌரவத்தை வழங்குகின்றோம்.

ஆனால் இது விடயத்தில் சட்ட ரீதியாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதையும் சுட்டிக்காட்டுகின்றோம். ஆளுங்கட்சி பக்கம் இருந்து முடியாவிட்டால், எதிரணி பக்கம் வாருங்கள், கூட்டாக இணைந்து பயணிப்போம்.

சட்டத்தை கையில் எடுத்து செயற்பட்ட தோட்ட உதவி முகாமையாளர் உடன் கைது செய்யப்பட வேண்டும்.” – என்றார்.

Related Articles

Latest Articles