கடந்த காலங்களில் தோட்ட நிருவாகத்தினருக்கும், தொழிலாளிகளுக்கும் இடையில் நாளொன்றுக்கான ஊதியம் தொடர்பாக ஏற்பட்ட முறுகல் நிலை காரணமாக மக்கள், தீர்வு எட்டப்படாத நிலையில் வேலை நிறுத்தம் செய்து ஆர்பாட்டங்களை மேற்கொண்டனர்.
தொழிலாளர்களால் முன்னெடுக்கப்பட்ட இவ் ஆர்பாட்டங்கள் சுகாதார விதி முறைகளுக்கமைய இடம்பெறவில்லை என சுகாதார பிரிவினர் விசனம் தெரிவித்ததோடு இருவாரங்கள் முழுமையாக தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசமாக அறிவித்தனர்.இருந்தபோதிலும் இம்மக்களுக்கு எவ்வித நிவாரன உதவிகளும் கிடைக்கப்பெறவில்லை.
அத்தருணத்தில் வேலையின்றி வாழ்வாதார பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வந்த கொட்டியாகலை கீழ்பிரிவு மக்கள் நோர்வூட் பிரதேச சபை தலைவர் ரவி குழந்தைவேல் அவர்களிடம் முன்வைத்த முறைப்பாடுக்கமைய கெளரவ இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் அவர்களது கவனத்திற்கு கொண்டு சென்றதன் விளைவாக, அமைச்சரின் அழுத்தத்தின் பேரில், நுவரெலியா மாவட்ட அரசாங்க அதிபரின் மூலம் கிராமசேவகர் ஊடாக உலர் உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.
மேலும் இப்பிரதேச மக்களுக்கு PCR பரிசோதனை மேற்கொண்ட போது 35 பேருக்கு கொரோனா தொற்று இருப்பதாக உறுதிப்படுத்தப்பட்டு,சுகாதார பிரிவினரால் தொடர்ந்து 14 நாட்களுக்கு முழுமையாக தனிமைப்படுத்தப்பட்டனர்.
அத்தருணத்திலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எவ்வித நிவாரன உதவிகளைகளும் வழங்கப்படவில்லை.
அந்தவகையில் சகல மக்களுக்கும் நிவாரன உதவிகளை பெற்றுக்கொடுக்கும் நோக்கத்தில், மீண்டும் கெளரவ இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் அவர்களிடம், கேட்டுக்கொண்டதற்கிணங்க தோட்டவீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு அமைச்சினூடாக நிதி ஒதுக்கப்பட்டு, நோர்வூட் பிரதேச சபை தலைவர் ஏற்பாட்டில் சகல குடும்பங்களுக்கும் உலர் உணவு நிவாரன பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் பொகவந்தலாவ பிரதேச அமைப்பாளர்கள், இளைஞர் அணி இணைப்பாளர் மற்றும் இ.தொ.கா காரியாலய உத்தியோகத்தர் என பலரும் கலந்து கொண்டனர்.