மியன்மாரில் அடுத்தடுத்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட கட்டட இடிபாடுகளில் சிக்கி உயிரிந்தோரின் எண்ணிக்கை 3 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
மியன்மாரில் கடந்த மாதம் 29ம் திகதி சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில், மியான்மரின் பெரும்பாலான நகரங்கள் உருக்குலைந்து போயின. வானுயர கட்டடங்கள் சரிந்து விழுந்ததில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.
நிலநடுக்கம் ஏற்பட்டு ஒருவாரம் ஆன நிலையில், மீட்புப் பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. சாலைகளில் விரிசல்கள் ஏற்பட்டதால், மீட்புப் பணிகளை மேற்கொள்வது சவாலாக உள்ளது.
இந்த நிலையில், நிலநடுக்கத்தால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3,145 ஆக அதிகரித்துள்ளது. மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.