எதிர்வரும் சனிக்கிழமை மதியத்திற்குள் எஞ்சியுள்ள பணயக்கைதிகளை ஹமாஸ் அமைப்பு விடுதலை செய்யாவிட்டால், நரகத்தை போன்ற மிகமோசமான நிலை உருவாகும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார்.
பணயக் கைதிகளை ஹமாஸ் விடுவிக்காவிட்டால், போர் நிறுத்தத்தை இஸ்ரேல் கைவிடவேண்டும் எனவும் ட்ரம்ப் வலியுறுத்தியுள்ளார்.
பணயக் கைதிகள் பரிமாற்றத்தை இடைநிறுத்துவதாக ஹமாஸ் அறிவித்துள்ள நிலையிலேயே, அமெரிக்க ஜனாதிபதியால் இவ்வாறு காலக்கெடு வழங்கப்பட்டுள்ளது.
இதற்கமைய எதிர்வரும் சனிக்கிழமை நண்பகல் 12 மணிக்குள் அனைத்து பணயக்கைதிகளையும் ஒப்படைக்கப்படாவிட்டால், யுத்த நிறுத்தத்தை கைவிட்டுவிட்டு நரகம் போன்ற ஒரு நிலை உருவாகுவதற்கு இடமளியுங்கள் என தெரிவிப்பேன் என டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.