நடாஷா எதிரிசூரிய மற்றும் புருனோ திவாகர ஆகியோரை எதிர்வரும் 21 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
பௌத்த மதத்தை அவமதித்த குற்றச்சாட்டின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நடாஷா எதிரிசூரிய, SL-Vlog உரிமையாளர் புருனோ திவாகர ஆகியோர் இன்று நீதிமன்றில் முன்னலைப்படுத்தப்பட்டபோதே அவர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு வழங்கப்பட்டுள்ளது.
அதேவேளை, ராஜாங்கனே சத்தாரத்தன தேரரையும் எதிர்வரும் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையிலான கருத்துக்களை வெளியிட்டதற்காக கடந்த மே மாதம் 28ஆம் திகதி சத்தாரத்தன தேரர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
