நடிகர் அர்ஜூனுக்கு கொரோனா தொற்று

தமிழ் திரையுலகில் ஆக்‌ஷன் கிங் என்று அழைக்கப்படுபவர் நடிகர் அர்ஜூன். இவர் நடித்த படங்கள் மூலம் தனக்கென ரசிகர் கூட்டத்தை உருவாக்கியவர். தமிழ் தவிர தென் இந்திய மொழிகளிலும் அவர் ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.
தற்போது, சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோ ஒன்றில் தொகுப்பாளராக உள்ளார். இதைத்தவிர சில படங்களிலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில், தனக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருப்பதாக நடிகர் அர்ஜூன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் இன்ஸ்டா ஸ்டோரியில் குறிப்பிடுகையில், ” எனக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி இருக்கிறது. நான் என்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன்.
தன்னுடன் தொடர்பில் இருந்தவர்களும் கொரோனா பரிசோதனை செய்துக் கொள்ள வேண்டும்.
நான் நலமுடன் இருக்கிறேன். நீங்களும் பாதுகாப்பாக இருங்கள். முகக்கவசம் அணியுங்கள்” என்று பதிவிட்டுள்ளார்.

Related Articles

Latest Articles