குணச்சித்திர நடிகர் தீப்பெட்டி கணேசன் உடல்நலக் குறைவு காரணமாக காலமானார். அவருக்கு2 குழந்தைகள் உள்ளனர்.
ரேணிகுண்டா, பில்லா 2, தென்மேற்கு பருவக்காற்று, உஸ்தாத் ஹோட்டல், நீர்ப்பறவை, கண்ணே கலைமானே உள்ளிட்ட பல படங்களில் நடித்து தனக்கென ஓர் அடையாளத்தை ஏற்படுத்தியவர் நடிகர் தீப்பெட்டி கணேசன்.
ஆனால், அடுத்தடுத்த திரை வாய்ப்புகள் இல்லாத காரணத்தால் அவர் பாதிக்கப்பட்டார். பொருளாதாரத்தில் நலிவடைந்த நிலையில், தீப்பெட்டி கணேசன் பல்வேறு சிறு தொழில்களை செய்து வந்தார்.
கடந்த ஆண்டு, கொரோனா ஊரடங்கு காலத்தில், பால் வாங்கக்கூட காசு இல்லை என்றுகூறி இவர் வெளியிட்ட வீடியோவைப் பார்த்து கவிஞர் சினேகன் இவருக்கு உதவிக்கரம் நீட்டினார்.
இந்நிலையில், உடல்நலக் குறைவால் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு இறந்தார்.
