நடிகர் விக்ரமிற்கு கொரோனா தொற்று உறுதி

கொரோனா தொற்றின் அலை இன்னும் ஓயவே இல்லை. கடந்த வருடத்தில் இருந்து மக்கள் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.

கோடிக்கணக்கான மக்கள் கொரோனா தாக்கத்தால் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்துள்ளார்கள்.

பிரபலங்களின் அண்மையில் கமல்ஹாசன் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டார், பின் நடிகர் அர்ஜுன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பதாக இன்ஸ்டாவில் பதிவு செய்தார்.

இந்த நிலையில் நடிகர் விக்ரமிற்கும் கொரோனா நோய் தொற்று உறுதியாகியுள்ளது தெரியவந்துள்ளது.

உடல் சோர்வு காரணமாக ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் டெஸ்ட் எடுத்துள்ளார், அதில் அவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

தற்போது தனது வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளாராம்.

Related Articles

Latest Articles