ஹங்குராந்கெத்த பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹோவாஹெட்ட ஹோப் தோட்ட கீழ் பிரிவில் முச்சந்தியொன்றில் பூஜை பொருட்கள் காணப்பட்டமை தொடர்பில் பிரதேச மக்கள் சந்தேகம் எழுப்புகின்றனர்.
மர்ம கும்பலொன்று நள்ளிரவு வேளையில் எதற்காக இவ்வாறு பூஜை நடத்த வேண்டும், புதையல் தோண்டும் நோக்கம் இதன் பின்புலத்தில் இருக்குமா எனவும் கேள்வி எழுப்புகின்றனர்.
இது பற்றி தாம் ஹங்குராந்கெத்த பொலிஸாருக்கு தெரியப்படுத்தியுள்ளதாகவும் கூறினர்.
முச்சந்தியில் விலங்குகளுடையது என சந்தேகிக்கப்படும் எலும்புக்கூடுகளும் இருந்துள்ளன. இவ்விடயத்தில் வேள்வி பூஜையேனும் நடத்தப்பட்டுள்ளதா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
இதற்கு முன்னர் இச்சந்தியில் இப்படி நடந்ததில்லை எனவும், தற்போது நடந்துள்ளதால்தான் சந்தேகம் ஏற்படுகின்றது எனவும் பிரதேச மக்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.
க,யோகா
