நத்தார் பண்டிகையை முன்னிட்டு ஜனாதிபதி பொதுமன்னிப்பின்கீழ் பதுளை மற்றும் தல்தென சிறைச்சாலைகளில் இருந்து 68 பேர் இன்று (25) விடுதலை செய்யப்பட்டனர் என்று சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி பதுளை சிறைச்சாலையில் இருந்து 12 ஆண் கைதிகளும், தல்தெனவில் உள்ள இளைஞர் புனர்வாழ்வு மையத்திலிருந்து 56 கைதிகளும் இவ்வாறு விடுவிக்கப்பட்டுள்ளனர்.
தண்டப்பணம் செலுத்த முடியாமல் சிறை தண்டனை எதிர்கொண்டவர்கள் மற்றும் சிறு குற்றங்களுடன் தொடர்புடையவர்களே இவ்வாறு விடுவிக்கப்பட்டுள்ளனர்.
நத்தார் பண்டிகையை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் 1004 கைதிகள் இன்று விடுதலை செய்யப்படுகின்றனர்.
ராமு தனராஜ்