நமுனுகலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, இந்துகலை அப்பர் டிவிஷன் பகுதியில் ஒப்பந்த அடிப்படையில் தோட்டத்தொழிலுக்கு சென்ற 09 தொழிலாளர்கள் குளவி கொட்டுக்கு இலக்காகி தெமோதரை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் நான்கு பேர் மேலதிக சிகிச்சைகளுக்காக பதுளை வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதோடு மூவர் தெமோதரை வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இருவர் சிகிச்சையின் பின் வீடு திரும்பியுள்ளனர்.
3 பெண்களும் 4 ஆண்களுமே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
நிருபர் – ராமு தனராஜா
