நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒத்திவைப்பு?

அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை சபாநாயகரிடம் கையளிக்கும் நடவடிக்கையை தற்காலிகமாக ஒத்திவைப்பது தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தி பரீசிலித்துவருகின்றது.

நாடாளுமன்றம் எதிர்வரும் 19 ஆம் திகதி கூடவிருந்தது. அன்றைய தினம் இப்பிரேரணை கையளிக்கப்படும் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

சர்வதேச நாணய நிதியத்துடன் 18 ஆம் திகதி அரசு பேச்சு நடத்தவுள்ளது. நம்பிக்கையில்லாப் பிரேரணையை முன்வைத்தால் ,அரசியல் ஸ்தீரமன்ன நிலை என்பதை காரணம்காட்டி அந்த பேச்சு வெற்றியளிக்காமல் போகலாம். எனவே, நாட்டு நலனை கருதி, பிரேரணையை முன்வைப்பதை பிற்போட எதிரணி உத்தேசித்துள்ளது.

Related Articles

Latest Articles