ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள குற்றப் பிரேரணை, அரசுக்கு எதிராக முன்வைக்கப்படவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை ஆகியவற்றுக்கு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் ஆதரவு வழங்காது என்று காங்கிரஸின் தவிசாளர் மருதபாண்டி ராமேஸ்வரன் எம்.பி. தெரிவித்தார்.
இது விடயத்தில் காங்கிரஸ் நடுநிலை வகிக்கும் எனவும் அவர் கூறினார்.
அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் காலம்தொட்டு காங்கிரஸ் இவ்வாறான நகர்வையே கையாண்டு வருகின்றது எனவும் சுட்டிக்காட்டினார்.