‘நம்பிக்கையில்லாப் பிரேரணை’ – கையெழுத்து வேட்டை ஆரம்பம்

சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை திரட்டும் நடவடிக்கையில் ஐக்கிய மக்கள் சக்தி இறங்கியுள்ளது.

“கையொப்பம் திரட்டும் பணி ஆரம்பமாகியுள்ளது.” – என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச நாடாளுமன்றத்தில் இன்று தெரிவித்தார்.

அத்துடன், சுகாதாரத்துறைமீது உண்மையான அக்கறை இருந்தால் குறித்த நம்பிக்கையில்லாப் பிரேரணையில் ஆளுங்கட்சியினரும் கையொப்பமிட வேண்டும் எனவும் எதிர்க்கட்சி தலைவர் சுட்டிக்காட்டினார்.

Related Articles

Latest Articles