” நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டுவருவதற்கான முழு உரிமையும், சுதந்திரமும் எதிர்க்கட்சிக்கு உள்ளது. அவ்வாறானதொரு பிரேரணை வந்தால் அதனை எதிர்கொள்வதற்கு நான் தயார்.”
இவ்வாறு சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.
அத்துடன், சுகாதாரத்துறை தொடர்பில் எதிர்க்கட்சிகளால் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்கு உரிய பதில்கள் வழங்கப்படும் எனவும் அவர் கூறினார்.
” இலவச சுகாதாரத்தை இல்லாதொழிக்கவே போலி பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. இப்படியான போலி பிரசாரத்தால் தனியார் வைத்தியசாலைக்கு செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.” எனவும் சுகாதார அமைச்சர் குறிப்பிட்டார்.
