நம்பிக்கையில்லாப் பிரேரணை! பலத்தை காட்ட இரு முனை போர்!!

சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை தோற்கடிப்பதற்கு ஆளுங்கட்சி தீவிரமாக செயற்பட்டுவருகின்றது.

பிரேரணைக்கு எதிராக ஆதரவு திரட்டுவதற்காகவும், பேச்சுகளை முன்னெடுப்பதற்காகவும் ஜனாதிபதியின் ஆலோசனைக்கமைய ஆளுங்கட்சிக்குள் குழுவொன்றும் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த குழு எதிரணி உறுப்பினர்களுடனும் பேச்சு நடத்திவருகின்றது எனவும், பிரேரணையை எதிர்க்க முடியாவிட்டால் வாக்கெடுப்பை தவிர்த்துக்கொள்ளுமாறு கோரப்பட்டுள்ளது என தெரியவருகின்றது.

அத்துடன், ஆளுங்கட்சியின் வெளிநாடு செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு நாடு திரும்பும் கட்டளையும் அனுப்பட்டுள்ளது.

அதேவேளை, நம்பிக்கையில்லாப் பிரேரணையை நிறைவேற்றிக்கொள்வதற்கு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியும் தீவிரம் காட்டிவருகின்றது. நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் உறுப்பினர்களுடன் பேச்சு நடத்தப்பட்டுவருகின்றது.

நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிப்பதற்கு தேசிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் தேசிய மக்கள் முன்னணி என்பவற்றின் நாடாளுமன்றக்குழு நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் 5 ஆம் திகதி கூடும்போது இது தொடர்பில் முடிவெடுக்கப்படலாம்.

நம்பிக்கையில்லாப் பிரேரணைமீதான வாக்கெடுப்பு செப்டம்பர் 8 ஆம் திகதி மாலை நடைபெறுகின்றது.

Related Articles

Latest Articles