சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைமீதான விவாதம் எதிர்வரும் 19 ஆம் திகதி நடைபெறும் என அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.
குறித்த பிரேரணைமீது இரு நாட்கள் விவாதம் நடத்தப்பட்டு 20 ஆம் திகதி மாலை வாக்கெடுப்பு நடத்தப்படலாம் என தெரியவருகின்றது.
மார்ச் மாதத்துக்குரிய 2ஆவது வார நாடாளுமன்ற அமர்வு 19 ஆம் திகதி ஆரம்பமாகின்றது. அவ்வாரத்துக்குரிய நிகழ்ச்சி நிரல் தொடர்பில் ஆராய சபாநாயகர் தலைமையில் நாடாளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பான குழு அடுத்தவாரம் கூடும்.
இதன்போது மேற்படி திகதிகள் உறுதிப்படுத்தப்படலாம் என தெரியவருகின்றது.
சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை விவகாரத்தில் எதிரணிகள் எல்லாம் ஒன்றுபட்டுள்ளதால், விவாதம், வாக்கெடுப்பு வாரத்தில் ஆளுங்கட்சி உறுப்பினர்களை கொழும்பில் முகாமிட்டு இருக்குமாறு பணிக்கப்பட்டுள்ளது.










