நம்பிக்கையில்லாப் பிரேரணை அரசின் பலத்தை வெளிப்படுத்தும்!

” அரசாங்கத்துக்குள் பிளவு ஏற்பட்டுள்ள நிலையில், நம்பிக்கையில்லாப் பிரேரணையை முன்வைப்பது அரசாங்கத்தை பலப்படுத்துவதாகவே அமையும். எனவே, பிரதான எதிர்க்கட்சி பொறுப்புடன் செயற்பட வேண்டும்.”

இவ்வாறு சர்வஜன அதிகாரத்தின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” பிரதி பாதுகாப்பு அமைச்சர் அருண ஜயசேகர, கிழக்கு மாகாண கட்டளைத் தளபதியாக இருந்த காலப்பகுதியில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு சம்பவத்தை மையப்படுத்தியே நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தின் பின்னணியில் சூழ்ச்சி இல்லை, பிரதான சூத்திரதாரி இல்லை என்ற நிலைப்பாட்டிலேயே நாம் இருக்கின்றோம்.

பிரதி பாதுகாப்பு அமைச்சராக செயற்பட்ட காலத்தில் அல்ல, இராணுவத்தில் அவர் செயற்பட்ட காலப்பகுதியை மையப்படுத்தியதாக பிரேரணை வருவதால் அது ஒட்டுமொத்த இராணுவத்தின் புகழுக்கு களங்கம் ஏற்படும்.
அதேவேளை, அரசாங்கத்துக்குள் பிளவு உள்ளது என்ற கருத்து நிலவுகின்றது. இந்நிலை அவ்வாறு இல்லை என்பதை இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை உறுதிப்படுத்திவிடும். ஆளுங்கட்சியின் இணைந்து அதனை தோற்கடித்துவிடுவார்கள்.” – என்றார்.

Related Articles

Latest Articles