நாடாளுமன்ற உறுப்பினர்கள் 225 பேரும் நாளை திங்கட்கிழமை கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளனர். இதன்படி நாடாளுமன்ற வளாகத்தில் வைத்து முற்பகல் 9.30 மணி முதல் 12.30 மணிவரை ரெபிட் என்டிஜன்ட் பரிசோதனை நடத்தப்படவுள்ளது.
அனைத்து எம்.பிக்களுக்கும் இப்பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை நாளை விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. 20 ஆம் திகதி மாலை வாக்கெடுப்பு நடத்தப்படும். அவ்வேளையில் எம்.பிக்கள் சபைக்குள் இருக்கவேண்டிவரும். இதனால் சபைக்குள் சமூக இடைவெளியை பின்பற்றுவது கடினமான விடயமாக அமையும்.
இந்நிலையிலேயே எம்.பிக்கள் முன்கூட்டியே கொவிட் – 19 பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர்.