பிரபல நடிகை நயன்தாரா தனித்துவமான அழகு சாதன பொருட்கள் தயாரிப்பில் அடி எடுத்து வைத்துள்ளது கோலிவுட்டில் பேசுபொருளாக மாறியுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நயன்தாரா தற்போது கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதைக்களங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். தமிழைக் கடந்து தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் முன்னணி நாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
இதனிடையே நயன்தாரா முதன்முறையாக தனித்துவமான அழகு சாதன பொருட்கள் தயாரிப்பில் கால் பதித்துள்ளார். உலகின் மிகப்பெரிய லிப் பாம் கலெக்ஷன் கம்பெனியான தி லிப் பாம் கம்பெனி எனும் நிறுவனத்துடன் இணைந்து தனது புதிய பயணத்தை தொடங்கியுள்ளார்.
அவர் முன்னணி தோல் மருத்துவர் டாக்டர் ரெனிட்டா ராஜன் உடன் இணைந்து காஸ்மெடிக்ஸ் வர்த்தக உலகில் ஒரு புதிய பிராண்டை அறிமுகம் செய்துள்ளார். இந்நிறுவனம் நூற்றுக்கணக்கான வகைகளில் லிப் பாம்கள் தயாரிக்க உள்ளது.
தான் பயன்படுத்தும் சொந்த சரும பராமரிப்பு பொருட்களில் மிகச்சிறப்பான செயல்திறன், உயர் பாதுகாப்பு அம்சங்களையே மிக முக்கிய அம்சமாக கருதுவேனென்றும், அந்த இரு அம்சங்களும் இந்த லிப் பாம் கம்பெனி பொருட்களில் கண்டிப்பாக இடம்பெறும் என்றும் நயன்தாரா கூறியுள்ளார்.