‘நல்லாட்சி அரசின் வீட்டு திட்டத்தை ஆரம்பிக்கவும்’

வடக்கு, கிழக்கில் நல்லாட்சி அரசில் ஆரம்பிக்கப்பட்ட வீடுகளை நிர்மாணித்துத் தரவேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் கோரிக்கை விடுத்தார்.

நாடாளுமன்றில் இன்று இது தொடர்பில் கேள்வி எழுப்பிய அவர், “நல்லாட்சி அரசில் ஆரம்பிக்கப்பட்ட வீடுகளை, தாம் பூர்த்தி செய்யமுடியாது என்று அரசின் அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர்” என்று குறிப்பிட்டார்.

எனினும், இதற்குப் பதிலளித்த அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, “நல்லாட்சி அரசின் காலத்தைக் காட்டிலும் தற்போதைய அரசு கடன் அடிப்படையில் அதிக எண்ணிக்கையிலான வீடுகளை அமைத்துக்கொடுத்துள்ளது” என்று தெரிவித்தார்.

இதன்போது குறுக்கிட்ட சாணக்கியன் எம்.பி., “இந்த வீடுகளுக்கு ஒரு இலட்சம் ரூபா மாத்திரமே கடன் வழங்கப்பட்டுள்ளது. இதனைக் கொண்டு வீடுகளை அமைக்கமுடியுமா?” என்றும் கேள்வி எழுப்பினார்.

இதற்குப் பதிலளித்த வீடமைப்புத்துறையின் முன்னாள் பிரதி அமைச்சர், “குறித்த வீடுகளுக்கு 6 இலட்சம் ரூபா கடன் வழங்கப்பட்டுள்ளது” என்று சுட்டிக்காட்டினார்.

எனினும், வழங்கப்பட்ட தகவல்கள் யாவும் பொய்யானவை என்று சாணக்கியன் எம்.பி. தெரிவித்தார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles