நல்லூரில் வாழும் பழங்குடியின மக்களின் பல்வேறு பிரச்சினைகளை ஆராய விசேட குழு

 

மூதூர் பிரதேச செயலகத்திற்குட்பட்ட நல்லூரில் வாழும்
பழங்குடியின மக்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ள நிலையில் அவர்களது உரிமைகள் பாதுகாக்கப்படுவதை உறுதிப்படுத்த உடனடியாக விசேட குழுவொன்றை நியமிக்க திருகோணமலை அரசாங்க அதிபருக்கு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் உத்தரவிட்டுள்ளார்.

நல்லூரைச் சேர்ந்த பழங்குடியின மக்கள் அண்மையில் திருகோணமலையில் உள்ள ஆளுநர் செயலகத்தில் நல்லூரில் தங்களின் வாழ்வாதார அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளமை குறித்து கிழக்கு ஆளுநரிடம் முறைப்பாடு செய்திருந்தனர்.

இதனையடுத்து நல்லூர் பிரதேசத்தை ஆளுநர் செந்தில் தொண்டமான் நேரில் சென்று பார்வையிட்டு, வெளி ஆக்கிரமிப்பாளர்களால் வாழ்வாதார அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வருவது குறித்து ஆராய்ந்ததுடன் பழங்குடியின மக்களையும் சந்தித்து கலந்துரையாடினர்.

இதன்பின் அவர்களின் பிரச்சினைகளை ஆராயவும், பழங்குடியின மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்படுவதை உறுதிப்படுத்தவும் உடனடியாக குழுவொன்றை நியமிக்குமாறு திருகோணமலை அரசாங்க அதிபருக்கு அறிவுறுத்தல் வழங்கியிருந்தார்.

 

Related Articles

Latest Articles