நள்ளிரவில் கோர விபத்து – மூவர் பலி! நால்வரின் நிலைமை கவலைக்கிடம்!!

யாழிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த அதிசொகுசு பஸ்ஸொன்று வவுனியா நொச்சிமோட்டை பாலத்திற்கு அருகில் நேற்று நள்ளிரவு விபத்துக்குள்ளானதில் சாரதி உட்பட மூவர் பலியாகியுள்ளனர். 17 பேர்வரை காயமடைந்துள்ளனர்.

பஸ், சாரதியின் கட்டுப்பாட்டைமீறி நொச்சிமோட்டை பாலத்தில் மோதிக் குடைசாய்ந்ததாலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

காயமடைந்தவர்கள் வவுனியா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதில் நால்வர் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இவ்விபத்து ஏற்பட்ட சமயம் அதே திசையில் பயணித்துக்கொண்ட மற்றுமொரு சொகுசு பேருந்தின் சாரதி தனது பேருந்தை விபத்து ஏற்படுவதை தவிர்க்கும் முகமாக வீதியின் ஒரமாக செலுத்தி மற்றுமொரு விபத்தை தவிர்த்திருந்தார்.

Related Articles

Latest Articles