நவகமுவ பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளந்தெரியாத இருவரே துப்பாக்கிச்சூட்டை நடத்திவிட்டு தப்பிச்சென்றுள்ளனர் எனக் கூறப்படுகின்றது.
பாதுகாப்பு பணியாளர்கள் போன்று வேடம்தரித்த சந்தேகநபர்கள், உயிரிழந்தவரின் வீட்டிற்கு சென்றுள்ளனர்.
அதன்பின்னர், குறித்த நபரை அப்பகுதியிலுள்ள வயலுக்கு அழைத்துச்சென்று துப்பாக்கிச்சூட்டை மேற்கொண்டுவிட்டு தப்பிச்சென்றுள்ளதாக பொலிஸார் கூறினர்.
சம்பவத்தில் காயமடைந்த நபர், சிகிச்சைகளுக்காக அத்துருகிரிய வைத்தியசாலை யில் அனுமதிக்கப்பட்டதுடன் மேலதிக சிகிச்சைகளுக்காக கொழும்பு தேசியவைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ள சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ள தாக பொலிஸார் தெரிவித்தனர். நவகமுவ வெலிபில்லேவ பகுதியைச் சேர்ந்த ஒருவரே துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்துள்ளார்.
