நவலோக்க மருத்துவமனை குழுமம் கொவிட்-19 நோயாளர்களுக்காக இரு விசேட சிகிச்சை மத்திய நிலையங்களை அமைத்துள்ளது

தனியார் மருத்துவத் துறையில் முன்னோடிகளான நவலோக்க மருத்துவமனை குழுமம் கொவிட்-19 வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட நபர்களுக்காக மருத்துவமனையின் வெளிப்புறத்தில் புதிதாக இரு விசேட சிகிச்சை மத்திய நிலையங்களை (Intermediate Care Center) ஆரம்பித்துள்ளது. கொவிட்-19 நோயாளர்களுக்கு சிகிச்சையளிப்பதற்கு தேவையான மருத்துவ சாதனங்கள், கிருமி நீக்கி உள்ளிட்ட சுகாதார அதிகாரிகளின் பூரண பங்களிப்பின் கீழ் ஆரம்பிக்கப்பட்ட இந்த விசேட சிகிச்சையளிப்பு மத்திய நிலையங்கள் கல்கிசை ஹோட்டலிலும் மற்றும் மிராஜ் ஹோட்டலிலும் அமைக்கப்பட்டுள்ளன. இந்த தனிப்பட்ட கொவிட் சிகிச்சை மத்திய நிலையங்கள் சுகாதாரப் பிரிவினரின் அனுமதியுடனும் மற்றும் மேற்பார்வையின் கீழும் நடத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதுதொடர்பாக கருத்து தெரிவித்த நவலோக்க மருத்துவமனை குழுமத்தின் பிரதித் தலைவர் ஹர்ஜித் தர்மதாஸ, “வேகமாக பரவி வரும் கொவிட்-19 நோயைக் கட்டுப்படுத்த அரசாங்கத்தினால் கடும் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதுடன் அரசாங்கத்துடன் இணைந்து இந்த நடவடிக்கைக்கு தோல்கொடுப்பதற்கு கொவிட்-19 நோயாளர்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக மருத்துவமனைக்கு வெளியில் இரு விசேட சிகிச்சையளிப்பு மத்திய நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் அரசாங்கத்தின் சுகாதார சேவை மீது சுமத்தப்பட்டுள்ள பாரத்தை ஓரளவுக்கு குறைப்பதற்கு சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது. இந்த மத்திய நிலையங்களில் கொவிட்-19 தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டவர்கள் தனிப்பட்டவிதத்தில் தங்களது ஆரோக்கியம் தொடர்பில் கவனம் செலுத்தும் நோயாளர்களுக்காக முற்றிலும் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த மத்திய நிலையங்களில் கடமையாற்றும் வைத்தியர்கள் மற்றும் தாதியர்கள் பாரிய அளவில் அர்ப்பணிப்புடன் கடமையாற்றுவதுடன் பாதுகாப்பான சூழலில் வேமான உடனடி சிகிச்சையை நோயாளர்களுக்கு பெற்றுக் கொடுப்பதற்காக இந்தத சவால் நிறைந்த காலப்பகுதிக்குள் அவர்கள் உச்ச அளவு பங்களிப்பை எமக்கு வழங்குவார்கள் என நம்புகின்றேன். கொவிட்-19 ந
ோயாளர்களுக்காக மேற்கொள்ளப்படும் அனைத்து சிகிச்சைகளும் சுகாதார அமைச்சின் வழிநடத்தல்களுக்கு அமைய மேற்கொள்ளப்படுகின்றதா என்பதை நாம் கவனித்துக் கொள்வோம்.” என தெரிவித்தார்.

கொவிட்-19 வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக உறுதியான நோயாளர்கள் நவலோக்க மருத்துவமனை குழுமத்திற்கு அழைப்பினை ஏற்படுத்தி இந்த விசேட கொவிட் சிகிச்சையளிப்பு மத்திய நிலையத்தில் அறையொன்றை பதிவு செய்துகொள்ள முடிவதுடன் அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்ட உச்ச அளவு தனிமைப்படுத்தல் காலப்பகுதியான 10 நாட்களுக்கு தங்கியிருக்க வேண்டியுள்ளது. இந்த விசேட சிகிச்சையளிப்பு மத்திய நிலையங்களுக்குள் கொவிட்-19 நோயாளர்களுக்கு உயர்ந்த தரத்தில் பூரண சிகிச்சையளிப்பு சேவைகளை பெற்றுக் கொடுப்பதற்கு இங்கு நிபுணத்துவம் கொண்ட ஊழியர்கள் கடமையாற்றுகின்றனர்.

இந்த சிகிச்சையளிப்பு மத்திய நிலையங்களில் சிகிச்சை பெறும் அனைத்து நோயாளர்களுக்கும் நாள்தோறும் மிகவும் பாதுகாப்பாக கண்காணிக்கப்படுவதுடன் வேறு ஏதாவது நோய் அறிகுறி தென்படும் பட்சத்தில் நிபுணத்துவம் கொண்ட வைத்தியர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும். அதன்போது நோயாளியின் நிலைமை சீரற்று காணப்படுமானால் நோயாளியை அதி தீவிர சிகிச்சைப் பிரிவிற்கு மாற்றுவதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

தனியார் மருத்துவ துறைக்கு தலைமைத்துவம் வகிக்கும் நவலோக்க மருத்துவமனைக் குழுமம் கொவிட்-19 வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்காக பல்வேறு புத்தாக்க முறைமைகளை நடைமுறைப்படுத்தி நோயாளர்கள் மற்றும் ஊழியர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. விசேடமாக ஆய்வுக்கூட பரிசோதனைகள் மற்றும் மருத்துவ செனலிங் சேவைகள், வீட்டிற்கு வந்து மேற்கொள்ளப்படும் பரிசோதனைகள், மருந்துகளை வீட்டிற்கே கொண்டுவருதல் மற்றும் டெலி ஹெல்த் வசதிகள் போன்ற சேவைகளின் மூலம் மருத்துவமனைக்கு வராமலேயே வீட்டிலிருந்தவாரே உடல்நல சேவைகளை பெற்றுக் கொள்வதற்கு வசதிகள் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles