லிந்துலை- நாகசேனை, டில்லுகுற்றி தோட்டத்தில் மண் ஏற்றி செல்லும் பணியில் ஈடுப்படுத்தப்பட்டிருந்த உழவு இயந்திரம் வேக கட்டுப்பாட்டை இழந்து விவசாய தோட்டத்திற்குள் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இன்று (19) பகல் இடம்பெற்றுள்ள இந்த சம்பவத்தில் உழவு இயந்திரத்தை செலுத்திய சாரதி பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.
டில்லுக்குற்றி தோட்டத்தில் குடிநீர் வங்கும் நடவடிக்கைக்காக மண் அகழும் பணி இடம்பெறுகிறது. இதன் போது மண் ஏற்றி செல்லும் பணியில் ஈடுபட்டிருந்த போது உழவு இயந்திரம் விபத்துக்குள்ளாகியுள்ளது.
ஆ.ரமேஷ்










