‘நாடாளுமன்றில் இருக்க பிடிக்கவில்லை’ – நீதி அமைச்சர் கருத்து

தனக்கு இருப்பதற்கு விருப்பமற்ற ஓர் இடமே பாராளுமன்றம் என தெரிவித்த நீதி அமைச்சர் அலி சப்ரி, அதற்கான காரணத்தையும் விளக்கினார்.

சிறைக்கைதிகளால் எழுதப்பட்ட கவிதைகள் அடங்கிய கவிதை தொகுப்பு நூல் நேற்று வெளியிடப்பட்டது.

இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய நீதி அமைச்சர்,

” நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும் கருத்துகளை செவிமடுத்துக்கொண்டு இருக்க முடியவில்லை. அவை அடிப்படையற்றவை. உரிய வகையில் உரையாற்றுவதற்கே சட்டத்தரணிகளுக்கு பயிற்சி வழங்கப்படும். ஆனால் அதற்கு புறம்பாகவே நாடாளுமன்றத்தில் இடம்பெறுகின்றது. விடயதானத்துக்கு அப்பால் சென்றே உரையாற்றுகின்றனர்.” – என்றார்.

Related Articles

Latest Articles