கம்பனிகள் அடாவடி: காணி உரிமை உறுதிமொழி மீறப்படுகிறது

நுவரெலியா மாவட்ட விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதுடன், அவர்கள் ஓரவஞ்சனைக்கு உள்ளாக்கப்பட்டு வருவதாக மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வீ.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று (உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

“பொருட்களை ஏற்றுமதி செய்வது மட்டும்தான் இந்த அரசாங்கத்தின் கொள்கையா? உள்நாட்டு உற்பத்தியை மேம்படுத்துவதற்காக அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் என்ன?” என கேள்வி எழுப்பினார்.

அதேவேளை, தோட்டங்களில் வேலை செய்யாவிட்டால் தொழிலாளர்களின் வீடுகளைப் பறிக்கும் நிறுவனங்களின் அச்சுறுத்தல் நிலை இன்னும் மாறவில்லை எனச் சுட்டிக்காட்டிய அவர், களனிவெளி பிளான்டேசன்ஸ் (Kelani Valley Plantations) நிறுவனம் தொழிலாளி ஒருவருக்கு அனுப்பியுள்ள கடிதமொன்றையும் சபையில் வாசித்துக் காட்டினார்.

தோட்டத்தில் வேலை செய்தாலும், செய்யாவிட்டாலும் தொழிலாளர்களுக்கு 10 பேர்ச்சஸ் காணி வழங்கப்படும் என ‘ஹட்டன் பிரகடனத்தில்’ உறுதியளிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த உறுதிமொழிக்கு மாறாகவே பெருந்தோட்ட நிறுவனங்கள் தன்னிச்சையாகச் செயற்பட்டு வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் வீ.ராதாகிருஷ்ணன் தனது கடுமையான விசனத்தை வெளிப்படுத்தினார்.

Related Articles

Latest Articles