நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பளம் 6 மாதங்கள் இடைநிறுத்தம்?

” நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால், 225 நாடாளுமன்ற உறுப்பினர்களினதும் சம்பளம் ஆறு மாதங்களுக்கு இடைநிறுத்தப்பட வேண்டும்.” – என்று ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” 225 நாடாளுமன்ற உறுப்பினர்களதும் சம்பளம் 6 மாதங்களுக்கு இடைநிறுத்தப்பட்டு, அந்த தொகை திறைசேரிக்கு அனுப்பட வேண்டும் என்ற யோசனையை நான் முன்வைக்கின்றேன்.

ஜனவரி மாதம் நாடாளுமன்றம் கூடுகின்றது. அப்போது இது தொடர்பில் நாடாளுமன்ற செயலாளருக்கு எழுத்துமூலம் அறிவிப்பேன். எனது சம்பளத்தை பதுளை மாவட்ட மக்களின் நலனுக்கு பயன்படுத்துமாறு கோருவேன்.

ஜனாதிபதி தனது அதிகாரத்தை பயன்படுத்தி எம்.பிக்களுக்கான சம்பளத்தை 6 மாதங்களுக்கு நிறுத்த வேண்டும்.” – என்றார்.

Related Articles

Latest Articles