நாடாளுமன்ற கட்சி தலைவர்களின் கூட்டம் இன்று பிற்பகல் 2 மணிக்கு இடம்பெறும்.
இது தொடர்பில் சபாநாயகர் நாடாளுமன்றத்திற்கு சற்று முன்னர் அறிவித்தார்.
அத்துடன் தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமை மற்றும் நாடாளுமன்றின் நிலைமை தொடர்பில் கட்சி தலைவர்கள் கூட்டத்தை கூட்டி தீர்மானத்தை ஜனாதிபதிக்கு அறிவிக்க முன்வர வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நானயக்கார தெரிவித்தார்.