9 ஆவது நாடாளுமன்றத்தின் ஐந்தாவது கூட்டத்தொடர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் இன்று வைபவ ரீதியாக ஆரம்பித்துவைக்கப்படவுள்ளது.
நாடாளுமன்றம் இன்று முற்பகல் 10.30 இற்கு கூடும். அதன்பின்னர் ஜனாதிபதியால் அரசின் கொள்கை பிரகடனம் முன்வைக்கப்படும்.
ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரை முடிவடைந்த பின்னர், நாடாளுமன்றம் நாளை முற்பகல் 9.30 மணிவரை ஒத்திவைக்கப்படும்.
ஜனாதிபதியின் கொள்கை விளக்கஉரைமீது நாளையும், நாளை மறுதினமும் நாடாளுமன்றத்தில் விவாதம் நடைபெறவுள்ளது. இதற்கான ஒத்திவைப்புவேளை பிரேரணைiயை எதிரணிகள் முன்வைக்கவுள்ளன.
இதேவேளை, இன்றைய பாராளுமன்ற அமர்வில் கலந்துகொள்ள தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு சபாநாயகர் அனுமதி வழங்கியுள்ளார்.
கெஹெலிய ரம்புக்வெல்ல விடுத்த கோரிக்கையைக் கருத்திற்கொண்டு இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்திற்கு எழுத்துமூலம் அறிவிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற படைக்கல சேவிதர் குஷான் ஜயரத்ன தெரிவித்துள்ளார்.