நாடாளுமன்ற கூட்டத்தொடர் இன்று ஆரம்பம் – ஜனாதிபதி பிறப்பித்துள்ள உத்தரவு

9 ஆவது நாடாளுமன்றத்தின் 4 ஆவது கூட்டத்தொடர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் இன்று சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்துவைக்கப்படவுள்ளது.

இதற்கான ஆரம்ப நிகழ்வு இன்று முற்பகல் நாடாளுமன்ற வளாகத்தில் மிகவும் எளிமையான முறையில் நடைபெறவுள்ளது.

ஜனாதிபதிக்கு வழமை போன்று வழங்கப்படும் மரியாதை வேட்டுக்கள் மற்றும் இராணுவ அணிவகுப்பு மரியாதை ஆகியவற்றை நடத்த வேண்டாம் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்ற உயர் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

முற்பகல் 10 மணியளவில் ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரை ஆரம்பமாகும். அன்றைய நாளில் ஜனாதிபதியின் உரை மாத்திரமே இடம்பெறும்.

ஜனாதிபதி தனது கொள்கை விளக்க உரையில் உள்ளாட்சித் தேர்தலை ஒத்திவைக்கும் யோசனையை முன்வைப்பார் என எதிர்க்கட்சிகள் தெரிவித்துள்ளன.

Related Articles

Latest Articles