நாடு இருளில் மூழ்குமா?

எண்ணெய் சுக்திகரிப்பு நிலையத்தை தற்காலிகமாக மூடியதாலும், மசகு எண்ணெய் இறக்குமதி நிறுத்தப்பட்டமையாலும் நாட்டில் மின்சார நெருக்கடி ஏற்படாது. எனவே, நாடு இருளில் மூழ்கும் எனக் கூறப்படுவதில் உண்மை இல்லை – என்று வலுசக்தி
அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

” நாட்டில் நிலவும் அந்நிய செலாவணி தொடர்பான பிரச்சினையை அடிப்படையாகக் கொண்டே மசகு கண்ணெய் இறக்குமதி நிறுத்தப்பட்டுள்ளது.

ஆனால் சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளை வெளிநாட்டில் இருந்து கொண்டுவருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது எமது நாட்டுக்கு நன்மையாகவே அமையும். இதன்மூலம் அந்திய செலவணியை முறையாக பேணமுடியும்.

போராட்டங்கள்மூலம் டொலர் கிடைக்குமானால் நானும் திறைசேரிக்கு முன்னால் சென்று போராட தயாராகவே இருக்கின்றேன்.”- என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Latest Articles